என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Thursday, April 7, 2011

யாழ் கழிவுகள்..

உலக அளவில் மக்களை அச்சுறுத்தும் பல தரப்பட்ட பிரச்சினை காணப்படுகிறது. சில பிரச்சனை சூழலை மையமாக கொண்டதாகவும் வேறு சில அரசியல், பொருளாதாரத்தை மையமாகவும் கொண்டு உருவாகின்றன.
இவை அனைத்துக்கும் உடனடியாகவோ அல்லது அவசரத்தின் மத்தியிலோ தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியாது. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, இதை உரிய தரப்பிடம் கூறியும் உரிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என நம் சமூகத்தவர் மத்தியில் தாரளமான கருத்துக்கள் காணப்படுவது வழக்கம் தான். இருப்பினும் சில பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த அடித்தளமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது மக்களாகிய எம் கையில் தான் இருக்கிறது. ஆனால் இதை யாரும் ஏற்பதோ, யோசிப்பதுமோ இல்லை என்றுதான் முடிகிறது. அனைத்திற்கும் ஒரு அதிகாரம் உள்ள தரப்பையோ அல்லது குறித்த ஒரு தரப்பையோ முழமையாக  குற்றம் சுமத்துவது சரிதானா????? {என்னதான் சொன்னாலும் வரும் கஸ்டங்களையும், விளைவையும் நாம் தானே எதிர் கொள்ள போகிறோம்!!!}, 

"தொடர்ந்து கருவுடன் முழமையாக சந்திக்கிறேன் அதுவரை இப்பொழது விடை பெறுகிறேன்....."



யாழ் கழிவுகளின் கருவோடு சந்திக்க மிக நீண்ட காலம் எடுத்துவிட்டேன், ஆனால் முழமையாக எழதிய பின் தான் வலைபதிவில் எழதவே ஆரம்பித்தேன். ஆனால் என்ன செய்ய காலத்தின் கட்டாயத்தால் நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.  
சரி பதிவின் கருவிற்கு வருகிறேன்பொதுவாக சமூகத்தில் இருக்கும் ஒரு சூழல் சார் பிரச்சினை வீடுகளில், தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகளின் தேக்கம். இது உலகலாவிய பிரச்சனைகளில் ஒன்றுதான். ஆனால் சில சமூகத்தில் முறையான ஒழங்குபடுத்தல், முறையாக கழிவுகளை அகற்றும் முறையால் முடிந்தவரை தீர்வுகள் காணப்படுகிறது. 



 யாழ் நகரை அண்டிய மக்கள் நடமாட்டம் 
அதிகமான வீதியின் நிலை

கிராமப்புறங்களை பொறுத்தவரை இவை பெரிதான குறிப்பிடத்தக்க பிரச்சினையாக அமைவதில்லை. ஏனெனில் கழிவுகள் கிராமங்களில் உரமாகவும், மீதியாகும் உணவுகள் வளர்ப்பு கால்நடைகளிற்கும் உணவாக நேரடியாக பயன்படுத்தபடுகிறது. ஆனால் நகர பகுதிகளில் கிராம பகுதிகளை போன்று இலகுவாக அகற்ற முடிவதில்லை. இதற்கு பிரதான காரணம் பல இருகின்றது , பொதுவாக பொருளாதாரத்தை மையமாக கொண்டதாக நகரப்பகுதி காணப்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது, இது கழிவுகளின் தேக்கத்தை அதிகரிக்கும் ஓர் காரணியாகிறது. 

இவ்வாறான கழிவுகளின் தேக்கங்களின் அதிகரிப்பே நகர மக்களின் அன்றாட சவால்களின் மத்தியில் தானும் ஓர் உறுப்பினராக இணைந்துள்ளது. 
நம் சமூகத்தவர்கள் குப்பைகளை {கழிவுகள்} அகற்றும் தன்மை இச்சவாலை மேலும் அதிகரிக்க செய்கிறது. நாம் முறையற்ற வகையில் குப்பைகளை தெரு ஓரங்களில் போட்டுவிட்டு அதை குறித்த பணியாளர்கள் அகற்ற தாமதிப்பதையே குற்றமாக கூறுவது ஓர் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றா?????
கழிவுகளை அகற்றும் முறையில் தாமதம் ஏற்படுவதை மட்டும் பார்பதை விடுத்து இந்த கழிவுகள் அகற்றப்படும்வரை சூழலை மாசுபடுத்தாது இருக்க என்ன நடவடிக்கை நம் சமூகத்தவர்கள் இணைந்து மேற்கொள்ள முடியும் என்று சிந்தித்திருப்போமா?????? இவ்வாறு சிந்திக்காதவிடத்து இதனால் வருகின்ற பாதிப்புகளை நாம் தானே எதிர்கொள்கிறோம்!!!! . முறையற்ற வகையில் கழிவுகளை நாம் போடும்போது அந்த கழிவுகள் குறித்த பணியாளர்களால் அகற்றும்வரை அதை பல ஆராட்சியாளர்கள் சோதனை செய்து விட்டு கழிவுகளை மேலும் சிதறடிக்கின்றனர், {என்ன ஆராட்சியாளர்கள் யாராக இருக்கும் என்று யோசிகின்றீர்களா?? வேற யார சொல்ல போறன் நம் சமூகத்தில் தாராளமாக திரிகின்ற கட்டாகாலி கால்நடைகள் தான்} '"இவ்வாறான கட்டாகாலி கால் நடைக்கும் ஏதாவது  சட்டங்களை நிறைவேற்றத்தான் வேண்டும்




சரி நான் கழிவுப்பிரச்சினைக்கு வாறன், பொதுவாக நம் நாட்டில் கழிவுகளை அகற்றுபவர்கள் மனிதர்கள்தான், இவர்களிற்கும் நம்மை போன்ற உணர்வுகள்தானே இருகின்றது???? ஏன் இதை நாம் சிலர் சி்ந்திப்பதில்லை??? , பொதுவாக முறையற்ற வகையில் கழிவுகள் எறியப்பட்ட இடத்திற்கு அருகாக செல்லும் போது எவ்வளவு இடர்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றோம். இவ்வாறான கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் எவ்வளவு கஸ்டத்தை எதிர் கொள்வர்???{ "தன் குடும்பத்தின் வயிற்றை நிரப்பவே இத்தனை கஸ்டங்களை சகித்து நம் சமூக கழிவுகளை அகற்றுகின்றனர்"
நாம் அலட்சியத்தோடு கழிவுகளை முறையற்று போடுவதால் குறித்த நம் சமூகம் உட்பட எத்தனையோ தரப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்டுகிறது. இந்த பிரச்சனையை ஒவ்வோர் சமூகமூம் ஒருமித்த முடிவுடன் முயற்சி செய்தால் நம் சமூகத்தை பாதுகாக்கும் முக்கிய பங்கை நம்மால் வெற்றிகரமாக செயற்படுத்தமுடியும்............... 


"இந்த பிரச்சினைக்கு நம் சமூகத்தவர்களால் என்ன நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை கருத்து பதிவுடன் கூறுங்கள்......."



Friday, March 25, 2011

கற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011


வணக்கம் அன்பு உறவுகளே தொடர்ச்சியாக மூன்று பதிவுகள் எனது ஊர் ஆலய மகோற்சவ பதிவாக அமைந்திருந்தது,,அதே போன்று இந்த பதிவும் கற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011 நடைபெற்றது, அந்த நிகழ்வின் ஒளிப்பதிவு, புகைப்பட தொகுப்பை பதிவாக உறவுகளிற்காக இடுகின்றேன்....
{{அடுத்த பதிவை மாற்றத்தோடு சந்திக்கிறேன்}}

Saturday, March 19, 2011

கற்பகத்தான் தேர் பகுதி 02



வணக்கம் உறவுகளே, என் ஊரில் 01.02.2011 கற்பகவிநாயகர் தேர் உற்சவம் நடைபெற்றது , அதன் ஒளிப்பதிவு காட்சியின் தொகுப்போடு மீண்டும் பகுதி 02 இல் இப்போது சந்திக்கின்றேன்

Wednesday, March 16, 2011

கற்பகத்தான் தேர் பகுதி 01.02.2011


வணக்கம் உறவுகளே, என் ஊரில் 01.02.2011 கற்பகவிநாயகர் தேர் உற்சவம் நடைபெற்றது , அதன் ஒளிப்பதிவு காட்சியின் தொகுப்போடு மீண்டும் இப்போது சந்திக்கின்றேன்

Thursday, February 24, 2011

நம் பல்கலைத் தென்றல்...


இலங்கையில் 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின் தமிழ் நாடக துறை தோற்றம் பெற்றது. இந்த நாடக துறையானது யாழ்ப்பாணம்,கொழம்பு,மட்டக்களப்பு,மன்னார் மற்றும் மலையகம் என பிரதேச ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

  நம் நாட்டின் பல்துறை கலைஞர்களில் ஒருவர் சிறீதர் பிச்சையப்பா, இவர் 1963 ஜீலை 20ஆம் திகதி கொழம்பு கொட்டாச்சேனையில் பிறந்தார். தன் கல்வியை இவர் கொழம்பு விவேகானந்தா கல்லுரியில் பயின்றார். இவர் பிரபல நாடக நடிகர் டி.வி.பிச்சையப்பா வின் மகன் ஆவார். சிறீதர் தனது 11ஆவது வயதில் இலங்கை வானொலியின் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி முலம் நாடகத்துறை பயணத்தை ஆரம்பித்து பிற்காலத்தில் பல்கலை கலைஞராக தோற்றம் பெற்ரார். இவர் ஏராளமான வானொலி,தொலைக்காட்சி,மேடை நாடங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றி நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். நாடகம் தவிர பாடலாசிரியராக,பின்னனி பாடகராக,இயக்குனராக,மிமிக்கிரி கலைஞராகவும் மற்றும் நவீன ஓவியங்கள் வரைவதிலும் முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் தமிழ் நாடகத் துறைக்காக சிங்கள மொழி நாடகங்களை மொழிபெயர்த்து வழங்கினார். பல்கலை தென்றல் சிறீதர் பிச்சையப்பா 2010 பெப்ரவரி 21 இல் தனது 47வது வயதில் சுகவீனம் காரணமாக காலமானார்..

''நம்மர் படைப்புகளை உலகறிய செய்ய இணைவோம்''

Monday, February 7, 2011

எல்லாம் அவன் செயல்...

என் அன்பு உறவுகளிற்கு வணக்கம் , என் எண்ணங்களை , தேடல்களை உங்களோடு பகிர்வதற்காக என் வலை பதிவை அரம்பிதேன், இருபினும் என் வாழ்வின் அடுத்த படிகளை நோக்கிய பணத்திற்கா சில முயற்சியால் பதிவுகளை இட முடியவில்லை, எனினும் நீங்கள் என்னோடு பகிர்ந்த பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்தேன் ஆனால் சிலவற்றிற்குதான் கருத்துக்களை இட்டேன், சரி விடயத்திற்கு வருவோம் நீண்ட இடைவெளியின் பின் இடும் பதிவானது என் ஊரின் ஆலய உற்சவகால புகைப்பட தொகுப்பாக இடுகின்றேன் {எல்லாம் அவன் செயல்},