முடித்தவரை புதிதாக தொடர்ந்து எழத வேண்டும் என்பது எனக்கு விருப்பம். முடிந்தவரை முயற்சிக்கின்றேன். இன்றய பதிவு இன்றைய தினத்திலே போடவேண்டும் என்ற ஓர் உறுதியோடே இந்த மனதில் மகிழ்ச்சியை தரும் பதிவை எழதுகிறேன்.
பொதுவாக நம் வாழ்கையை வழிப்படுத்திய ஒவ்வொரு குருவையும் எம் வாழ்வில் மறக்கவே முடியாது. நம் வளர்ச்சிக்கு அவர்கள் தந்த அறிவும், ஆசியும் காரணங்களில் பிரதானமாகிறது. என் வாழ்விலும் ஒவ்வொரு படியிலும் என்னை கைகொடுத்து நம்பிக்கை தந்து ஏணியாய் இருந்து ஏற்றியவர்கள் என்றும் என் மனதோடு. இவர்களை பார்த்து ஆசி பெற வேண்டும் அவர்களோடு பாடசாலை காலத்தில் இருந்த அதே நெருக்கத்தோடு பழக வேண்டும் என்ற ஆசை , ஒரு சில ஆசிரியர்கள் கல்வி சார் துறையில் நானும் ஏதோ ஒரு நிலையில் இருப்பேன் என்று நம்பினர், ஆனால் எனக்கு ஊடகமும் அதன் சார் தொழில் நுட்பம் மீதான முழ ஆர்வம் காரணமாக கல்வி மீது பெரிதாக ஆர்வம் செலுத்முடியவில்லை. ஆனால் பாடசாலை கல்வியை முழமையாக முடித்தேன். இந்த தாழ்வு மனப்பாங்குதான் என் பாடசாலை ஆசிரியர்களை பார்க்க தடுக்கும் காரணம். இந்த பதிவு மூலம் என் மதிப்புக்குரிய பாடசாலை கால ஆசிரியர்களிம் தலை பணிந்து மன்னிப்பு கேட்கின்றேன்.............
உயர்தரம் முடித்த பின் என் இலட்சியத்திற்கு பாதை அமைத்து வழிகாட்ட எனக்கு கிடைத்த ஆசான் பெயர்" தினேஸ்குமார்" இன்று தன் பிறந்த நாள் கொண்டாடுகிறார். முதலில் என் ஆசானிற்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறுகிறேன்.
இன்றைய பதிவை இந்த ஆசானிற்காகவே பிரதானமாக எழத ஆரம்பித்தேன். உண்மையில் கணணி அறிவே பெரிதாக இல்லாத நேரத்திலே Multimedia கற்கை நெறியை இலக்கின் முதல் படியாக ஆரம்பித்தேன்.மனதில் பயம் தான் அதிகம்{ கணணி அறிவு ஆரம்பத்தில் இருந்தால் அந்த பயம் இருந்திருக்காது என இப்போ நினைக்கிறன்}. கற்கை நெறி ஆரம்பித்து 2 நாட்களின் பின்தான் நான் இணைந்தேன் அது மேலும் பயத்தை ஏற்படுத்தியது. எனக்கு கிடைத்த இன்றய பிறந்தநாள் நாயகனான என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானின் அக்கறையானதும், மனப்பூர்வமானதுமான அந்த கற்பித்தல் முறை என் நிலையையும், நம்பிக்கையையும் படிப்படியாக அதிகரிக்க செய்தது.
அவரிடம் 8 மாத காலம் முழநேரமாக கற்றிருக்கின்றேன். அவரின் கற்பித்தல் முறை ரொம்பவே வித்தியாசமானது.பொறுமையானதும், எந்த கஸ்டமான விடயத்தையும் புரிய வைக்கும் தன்மையும் இன்று கூட எனக்கு அதியமாகவே உள்ளது. அவரிடம் கற்று நீண்டகாலம் கடந்தாலும் இன்றும் ஒவ்வொரு விடயமும் நினைவோடு நிற்க காரணம் அவரின் அந்த அக்கறையானதும் அன்பானதுமான கற்பித்தல் முறைதான். ஒவ்வொரு மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களின் திறமைகளை அடையாலம் கண்டு அதற்கமய சிறந்த வழிகாட்டியாக இருப்பவர். எனக்குள் இருக்கும் எனக்கே தெரியாமல் இருந்த பல விடயங்களை எனக்கு உணரவைத்த என் தெய்வத்தை போன்ற குரு. பல என் கூட இருக்கும் உறவுகள், நண்பர்களிற்கு நான் கற்றதை பயமின்றி முழமையாக அவர்களிற்கும் என்னால் முடிந்தவரை சொல்லிக் கொடுக்க முடிகிறது என்றால் முழ காரணம் இன்றைய பிறந்தநாள் கொண்டாடும் தினேஸ் sir தான். இவரிடம் கற்ற பல விடயம் இன்று என் ஒவ்வொரு வாழ்கையின் இலக்கின் ஒவ்வொரு அடியையும் நம்பிக்கையோடு எடுத்து வைக்க துணையாக உள்ளது. என் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பிரதானமாக தினேஸ் sir இன் வாழ்த்தை எதிர்பார்த்து என் முகப்புத்தகத்தில் போடுவது வழக்கம், அதே போல தினேஸ் sir இன் வாழ்த்தும் பாராட்டும் கண்டிப்பாக கிடைக்கும். அந்த வாழ்து மேலும் ஓர் நம்பிக்கையை தரும்.
தினேஸ் Sir |
தினேஸ் Sir |
என் முகப்புத்தகம் பற்றி ஏதும் தெரியாத போது முகப்புத்தகம் இருந்தால் உன் இலக்கு தொடர்பாக பல பிரபலங்களை நண்பர்கள் ஆக்கி இலக்குக்கு சந்தர்ப்பம் அமைக்க உதவும் என்று என்னை ஊக்கப்படுத்தினார். முகப்புத்தகத்தில் வரும் பிரச்சனைகள் பற்றி கூறி ஆரம்பத்தில் என்னை விழிப்படைய வைத்தார். அவர் கூறியது போல் face book எனக்கு பல இலக்கு தொடர்பான சந்தர்ப்பத்தை தந்தது. மறக்க முடியாத பெரிய சந்தர்ப்பம் வந்தும் அதை நான் சில என் எதிர்காலத்தில் முழமையான இலக்கின் தொழில் சார் விடயங்களை கற்க வேண்டி இருந்ததால் அதை பலரின் கருத்துக்களோடு தற்காலிகமாக விலக்க வேண்டிய சூழ்நிலை. மனதில் வருத்தம் இருந்தாலும் என்னாலும் சாதிக்க முடியும் என்ற ஓர் அங்கீகாரமாக அந்த சந்தர்ப்பத்தை கருதி சந்தோசம் அடைந்து திருப்தி கொண்டேன். இந்த சந்தர்ப்பமும் தினேஸ் sir காட்டிய பாதையில் நம்பிக்கையோடு அவரின் ஆசியோடு பயணித்ததால் தான். தினேஸ் sir பற்றி பல விடயங்கள் என்னை மட்டுமல்லாது பலரை வழிப்படுத்தியது.
தினேஸ் Sir உடனும் சக மாணவர்ளோடும் நான் |
இவர் பற்றி என்னும் பல விடயங்களை கூற முடியும் கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும் போது ஓர் பதிவில் குறிப்பிடுவேன். உண்மையை சொன்னால் தினேஸ் sir எனக்கு கிடைத்திருக்கா விடின் என் இலட்சியம் பாதை மாறி ஏதோ மனதுக்கு இஸ்டம் இல்லாத ஏதோ ஓர் பாதையில் தான் பயணித்து கடைமைக்காக இலக்கு இல்லாத ஒருவனாகவே வாழ்ந்திருப்பேன்.
இதுவரை எதையும் பெரிதாக சாதிக்காவிடினும் என்னால் என்றோ ஓர் நாளில் என் இலக்கில் சிலர் அடையாலப்படுத்தும் அளவுக்கு என்றாலும் சாதிக்க முடியும் என்ற அந்த நம்பிக்கை பல சந்தர்ப்பமும் அங்கீகாரமும் எனக்கு அடித்தளம் ஆக அமைந்துள்ளது.
மீண்டும் என் வாழ்கை இலக்கை உணர வைத்து வழிப்படுத்தி நெறிப்படுத்திய ஆசான் தினேஸ் அவர்களிற்கு மனம் நிறைந்த அன்புகளோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
5 comments:
ஏணிகளைத் திரும்பிப் பார்க்கும் தங்கள் தயாள குணம் சிலிர்க்க வைக்கிறது... வாழ்த்துக்கள் டினு...
அண்ணா உங்கள் ஆசானுக்கு எனது வாழ்த்துக்கள்
அண்ணனின் வெற்றிப் பயணம் என்றும் தொடரட்டும்...
nanre @ ♔ம.தி.சுதா♔ , செல்வதி
இப்படியான ஆசான் எல்லோருக்கும் எழிதில் கிடைதுவிடமட்டார்கள்...
வாழ்த்துக்கள் என்பக்கமும் வர முடிந்தால் வாருங்கள்....வரவேற்க நான் தயராக உள்ளேன்...
@ ஆகுலன், anaku kedithathu unmaigil oru varam than,,,,,,
Post a Comment