என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Thursday, July 14, 2011

இலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்

வணக்கம் நண்பர்களே... 
முடித்தவரை புதிதாக தொடர்ந்து எழத வேண்டும் என்பது எனக்கு விருப்பம். முடிந்தவரை முயற்சிக்கின்றேன். இன்றய பதிவு இன்றைய தினத்திலே போடவேண்டும் என்ற ஓர் உறுதியோடே இந்த மனதில் மகிழ்ச்சியை தரும் பதிவை எழதுகிறேன்.

பொதுவாக நம் வாழ்கையை வழிப்படுத்திய ஒவ்வொரு குருவையும் எம் வாழ்வில் மறக்கவே முடியாது. நம் வளர்ச்சிக்கு அவர்கள் தந்த அறிவும், ஆசியும் காரணங்களில் பிரதானமாகிறது. என் வாழ்விலும் ஒவ்வொரு படியிலும் என்னை கைகொடுத்து நம்பிக்கை தந்து ஏணியாய் இருந்து ஏற்றியவர்கள் என்றும் என் மனதோடு. இவர்களை பார்த்து ஆசி பெற வேண்டும் அவர்களோடு பாடசாலை காலத்தில் இருந்த அதே நெருக்கத்தோடு பழக வேண்டும் என்ற  ஆசை , ஒரு சில ஆசிரியர்கள் கல்வி சார் துறையில் நானும் ஏதோ ஒரு நிலையில் இருப்பேன் என்று நம்பினர், ஆனால் எனக்கு ஊடகமும் அதன் சார் தொழில் நுட்பம் மீதான முழ ஆர்வம் காரணமாக கல்வி மீது பெரிதாக ஆர்வம் செலுத்முடியவில்லை. ஆனால் பாடசாலை கல்வியை முழமையாக முடித்தேன். இந்த தாழ்வு மனப்பாங்குதான் என் பாடசாலை ஆசிரியர்களை பார்க்க தடுக்கும் காரணம். இந்த பதிவு மூலம் என் மதிப்புக்குரிய பாடசாலை கால ஆசிரியர்களிம் தலை பணிந்து மன்னிப்பு கேட்கின்றேன்.............

உயர்தரம் முடித்த பின் என் இலட்சியத்திற்கு பாதை அமைத்து வழிகாட்ட எனக்கு கிடைத்த ஆசான் பெயர்" தினேஸ்குமார்" இன்று தன் பிறந்த நாள் கொண்டாடுகிறார். முதலில் என் ஆசானிற்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறுகிறேன். 

என் வாழ்கை இலக்கை உணர வைத்து வழிப்படுத்தி நெறிப்படுத்திய ஆசான் தினேஸ் Sir

இன்றைய பதிவை இந்த ஆசானிற்காகவே பிரதானமாக எழத ஆரம்பித்தேன். உண்மையில் கணணி அறிவே பெரிதாக இல்லாத நேரத்திலே Multimedia கற்கை நெறியை இலக்கின் முதல் படியாக ஆரம்பித்தேன்.மனதில் பயம் தான் அதிகம்{ கணணி அறிவு ஆரம்பத்தில் இருந்தால் அந்த பயம் இருந்திருக்காது என இப்போ நினைக்கிறன்}. கற்கை நெறி ஆரம்பித்து 2 நாட்களின் பின்தான் நான் இணைந்தேன் அது மேலும் பயத்தை ஏற்படுத்தியது. எனக்கு கிடைத்த இன்றய பிறந்தநாள் நாயகனான என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானின் அக்கறையானதும், மனப்பூர்வமானதுமான அந்த கற்பித்தல் முறை என் நிலையையும், நம்பிக்கையையும் படிப்படியாக அதிகரிக்க செய்தது.
    அவரிடம் 8 மாத காலம் முழநேரமாக கற்றிருக்கின்றேன். அவரின் கற்பித்தல் முறை ரொம்பவே வித்தியாசமானது.பொறுமையானதும், எந்த கஸ்டமான விடயத்தையும் புரிய வைக்கும் தன்மையும் இன்று கூட எனக்கு அதியமாகவே உள்ளது. அவரிடம் கற்று நீண்டகாலம் கடந்தாலும் இன்றும் ஒவ்வொரு விடயமும் நினைவோடு நிற்க காரணம் அவரின் அந்த அக்கறையானதும் அன்பானதுமான கற்பித்தல் முறைதான். ஒவ்வொரு மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களின் திறமைகளை அடையாலம் கண்டு அதற்கமய சிறந்த வழிகாட்டியாக இருப்பவர். எனக்குள் இருக்கும் எனக்கே தெரியாமல் இருந்த பல விடயங்களை எனக்கு உணரவைத்த என் தெய்வத்தை போன்ற குரு. பல என் கூட இருக்கும் உறவுகள், நண்பர்களிற்கு நான் கற்றதை பயமின்றி முழமையாக அவர்களிற்கும் என்னால் முடிந்தவரை சொல்லிக் கொடுக்க முடிகிறது என்றால் முழ காரணம் இன்றைய பிறந்தநாள் கொண்டாடும் தினேஸ் sir தான். இவரிடம் கற்ற பல விடயம் இன்று என் ஒவ்வொரு வாழ்கையின் இலக்கின் ஒவ்வொரு அடியையும் நம்பிக்கையோடு எடுத்து வைக்க துணையாக உள்ளது. என் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பிரதானமாக தினேஸ் sir இன் வாழ்த்தை எதிர்பார்த்து என் முகப்புத்தகத்தில் போடுவது வழக்கம், அதே போல தினேஸ் sir இன் வாழ்த்தும் பாராட்டும் கண்டிப்பாக கிடைக்கும். அந்த வாழ்து மேலும் ஓர் நம்பிக்கையை தரும்.
தினேஸ் Sir

தினேஸ் Sir
    
என் முகப்புத்தகம் பற்றி ஏதும் தெரியாத போது முகப்புத்தகம் இருந்தால் உன் இலக்கு தொடர்பாக பல பிரபலங்களை நண்பர்கள் ஆக்கி இலக்குக்கு சந்தர்ப்பம் அமைக்க உதவும் என்று என்னை ஊக்கப்படுத்தினார். முகப்புத்தகத்தில் வரும் பிரச்சனைகள் பற்றி கூறி ஆரம்பத்தில் என்னை விழிப்படைய வைத்தார். அவர் கூறியது போல் face book எனக்கு பல இலக்கு தொடர்பான சந்தர்ப்பத்தை தந்தது. மறக்க முடியாத பெரிய சந்தர்ப்பம் வந்தும் அதை நான் சில என் எதிர்காலத்தில் முழமையான இலக்கின் தொழில் சார் விடயங்களை கற்க வேண்டி இருந்ததால் அதை பலரின் கருத்துக்களோடு தற்காலிகமாக விலக்க வேண்டிய சூழ்நிலை. மனதில் வருத்தம் இருந்தாலும் என்னாலும் சாதிக்க முடியும் என்ற ஓர் அங்கீகாரமாக அந்த சந்தர்ப்பத்தை கருதி சந்தோசம் அடைந்து திருப்தி கொண்டேன். இந்த சந்தர்ப்பமும் தினேஸ் sir காட்டிய பாதையில் நம்பிக்கையோடு அவரின் ஆசியோடு பயணித்ததால் தான். தினேஸ் sir பற்றி பல விடயங்கள் என்னை மட்டுமல்லாது பலரை வழிப்படுத்தியது. 
தினேஸ் Sir உடனும் சக மாணவர்ளோடும் நான்
     

இவர் பற்றி என்னும் பல விடயங்களை கூற முடியும் கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும் போது ஓர் பதிவில் குறிப்பிடுவேன். உண்மையை சொன்னால் தினேஸ் sir எனக்கு கிடைத்திருக்கா விடின் என் இலட்சியம் பாதை மாறி ஏதோ மனதுக்கு இஸ்டம் இல்லாத ஏதோ ஓர் பாதையில் தான் பயணித்து கடைமைக்காக இலக்கு இல்லாத ஒருவனாகவே வாழ்ந்திருப்பேன். 
இதுவரை எதையும் பெரிதாக சாதிக்காவிடினும் என்னால் என்றோ ஓர் நாளில் என் இலக்கில் சிலர் அடையாலப்படுத்தும் அளவுக்கு என்றாலும் சாதிக்க முடியும் என்ற அந்த நம்பிக்கை பல சந்தர்ப்பமும் அங்கீகாரமும் எனக்கு அடித்தளம் ஆக அமைந்துள்ளது. 
மீண்டும் என் வாழ்கை இலக்கை உணர வைத்து வழிப்படுத்தி நெறிப்படுத்திய ஆசான் தினேஸ் அவர்களிற்கு மனம் நிறைந்த அன்புகளோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Thursday, April 7, 2011

யாழ் கழிவுகள்..

உலக அளவில் மக்களை அச்சுறுத்தும் பல தரப்பட்ட பிரச்சினை காணப்படுகிறது. சில பிரச்சனை சூழலை மையமாக கொண்டதாகவும் வேறு சில அரசியல், பொருளாதாரத்தை மையமாகவும் கொண்டு உருவாகின்றன.
இவை அனைத்துக்கும் உடனடியாகவோ அல்லது அவசரத்தின் மத்தியிலோ தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியாது. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, இதை உரிய தரப்பிடம் கூறியும் உரிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என நம் சமூகத்தவர் மத்தியில் தாரளமான கருத்துக்கள் காணப்படுவது வழக்கம் தான். இருப்பினும் சில பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த அடித்தளமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது மக்களாகிய எம் கையில் தான் இருக்கிறது. ஆனால் இதை யாரும் ஏற்பதோ, யோசிப்பதுமோ இல்லை என்றுதான் முடிகிறது. அனைத்திற்கும் ஒரு அதிகாரம் உள்ள தரப்பையோ அல்லது குறித்த ஒரு தரப்பையோ முழமையாக  குற்றம் சுமத்துவது சரிதானா????? {என்னதான் சொன்னாலும் வரும் கஸ்டங்களையும், விளைவையும் நாம் தானே எதிர் கொள்ள போகிறோம்!!!}, 

"தொடர்ந்து கருவுடன் முழமையாக சந்திக்கிறேன் அதுவரை இப்பொழது விடை பெறுகிறேன்....."யாழ் கழிவுகளின் கருவோடு சந்திக்க மிக நீண்ட காலம் எடுத்துவிட்டேன், ஆனால் முழமையாக எழதிய பின் தான் வலைபதிவில் எழதவே ஆரம்பித்தேன். ஆனால் என்ன செய்ய காலத்தின் கட்டாயத்தால் நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.  
சரி பதிவின் கருவிற்கு வருகிறேன்பொதுவாக சமூகத்தில் இருக்கும் ஒரு சூழல் சார் பிரச்சினை வீடுகளில், தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகளின் தேக்கம். இது உலகலாவிய பிரச்சனைகளில் ஒன்றுதான். ஆனால் சில சமூகத்தில் முறையான ஒழங்குபடுத்தல், முறையாக கழிவுகளை அகற்றும் முறையால் முடிந்தவரை தீர்வுகள் காணப்படுகிறது.  யாழ் நகரை அண்டிய மக்கள் நடமாட்டம் 
அதிகமான வீதியின் நிலை

கிராமப்புறங்களை பொறுத்தவரை இவை பெரிதான குறிப்பிடத்தக்க பிரச்சினையாக அமைவதில்லை. ஏனெனில் கழிவுகள் கிராமங்களில் உரமாகவும், மீதியாகும் உணவுகள் வளர்ப்பு கால்நடைகளிற்கும் உணவாக நேரடியாக பயன்படுத்தபடுகிறது. ஆனால் நகர பகுதிகளில் கிராம பகுதிகளை போன்று இலகுவாக அகற்ற முடிவதில்லை. இதற்கு பிரதான காரணம் பல இருகின்றது , பொதுவாக பொருளாதாரத்தை மையமாக கொண்டதாக நகரப்பகுதி காணப்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது, இது கழிவுகளின் தேக்கத்தை அதிகரிக்கும் ஓர் காரணியாகிறது. 

இவ்வாறான கழிவுகளின் தேக்கங்களின் அதிகரிப்பே நகர மக்களின் அன்றாட சவால்களின் மத்தியில் தானும் ஓர் உறுப்பினராக இணைந்துள்ளது. 
நம் சமூகத்தவர்கள் குப்பைகளை {கழிவுகள்} அகற்றும் தன்மை இச்சவாலை மேலும் அதிகரிக்க செய்கிறது. நாம் முறையற்ற வகையில் குப்பைகளை தெரு ஓரங்களில் போட்டுவிட்டு அதை குறித்த பணியாளர்கள் அகற்ற தாமதிப்பதையே குற்றமாக கூறுவது ஓர் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றா?????
கழிவுகளை அகற்றும் முறையில் தாமதம் ஏற்படுவதை மட்டும் பார்பதை விடுத்து இந்த கழிவுகள் அகற்றப்படும்வரை சூழலை மாசுபடுத்தாது இருக்க என்ன நடவடிக்கை நம் சமூகத்தவர்கள் இணைந்து மேற்கொள்ள முடியும் என்று சிந்தித்திருப்போமா?????? இவ்வாறு சிந்திக்காதவிடத்து இதனால் வருகின்ற பாதிப்புகளை நாம் தானே எதிர்கொள்கிறோம்!!!! . முறையற்ற வகையில் கழிவுகளை நாம் போடும்போது அந்த கழிவுகள் குறித்த பணியாளர்களால் அகற்றும்வரை அதை பல ஆராட்சியாளர்கள் சோதனை செய்து விட்டு கழிவுகளை மேலும் சிதறடிக்கின்றனர், {என்ன ஆராட்சியாளர்கள் யாராக இருக்கும் என்று யோசிகின்றீர்களா?? வேற யார சொல்ல போறன் நம் சமூகத்தில் தாராளமாக திரிகின்ற கட்டாகாலி கால்நடைகள் தான்} '"இவ்வாறான கட்டாகாலி கால் நடைக்கும் ஏதாவது  சட்டங்களை நிறைவேற்றத்தான் வேண்டும்
சரி நான் கழிவுப்பிரச்சினைக்கு வாறன், பொதுவாக நம் நாட்டில் கழிவுகளை அகற்றுபவர்கள் மனிதர்கள்தான், இவர்களிற்கும் நம்மை போன்ற உணர்வுகள்தானே இருகின்றது???? ஏன் இதை நாம் சிலர் சி்ந்திப்பதில்லை??? , பொதுவாக முறையற்ற வகையில் கழிவுகள் எறியப்பட்ட இடத்திற்கு அருகாக செல்லும் போது எவ்வளவு இடர்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றோம். இவ்வாறான கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் எவ்வளவு கஸ்டத்தை எதிர் கொள்வர்???{ "தன் குடும்பத்தின் வயிற்றை நிரப்பவே இத்தனை கஸ்டங்களை சகித்து நம் சமூக கழிவுகளை அகற்றுகின்றனர்"
நாம் அலட்சியத்தோடு கழிவுகளை முறையற்று போடுவதால் குறித்த நம் சமூகம் உட்பட எத்தனையோ தரப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்டுகிறது. இந்த பிரச்சனையை ஒவ்வோர் சமூகமூம் ஒருமித்த முடிவுடன் முயற்சி செய்தால் நம் சமூகத்தை பாதுகாக்கும் முக்கிய பங்கை நம்மால் வெற்றிகரமாக செயற்படுத்தமுடியும்............... 


"இந்த பிரச்சினைக்கு நம் சமூகத்தவர்களால் என்ன நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை கருத்து பதிவுடன் கூறுங்கள்......."Friday, March 25, 2011

கற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011


வணக்கம் அன்பு உறவுகளே தொடர்ச்சியாக மூன்று பதிவுகள் எனது ஊர் ஆலய மகோற்சவ பதிவாக அமைந்திருந்தது,,அதே போன்று இந்த பதிவும் கற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011 நடைபெற்றது, அந்த நிகழ்வின் ஒளிப்பதிவு, புகைப்பட தொகுப்பை பதிவாக உறவுகளிற்காக இடுகின்றேன்....
{{அடுத்த பதிவை மாற்றத்தோடு சந்திக்கிறேன்}}

Saturday, March 19, 2011

கற்பகத்தான் தேர் பகுதி 02வணக்கம் உறவுகளே, என் ஊரில் 01.02.2011 கற்பகவிநாயகர் தேர் உற்சவம் நடைபெற்றது , அதன் ஒளிப்பதிவு காட்சியின் தொகுப்போடு மீண்டும் பகுதி 02 இல் இப்போது சந்திக்கின்றேன்

Wednesday, March 16, 2011

கற்பகத்தான் தேர் பகுதி 01.02.2011


வணக்கம் உறவுகளே, என் ஊரில் 01.02.2011 கற்பகவிநாயகர் தேர் உற்சவம் நடைபெற்றது , அதன் ஒளிப்பதிவு காட்சியின் தொகுப்போடு மீண்டும் இப்போது சந்திக்கின்றேன்

Thursday, February 24, 2011

நம் பல்கலைத் தென்றல்...


இலங்கையில் 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின் தமிழ் நாடக துறை தோற்றம் பெற்றது. இந்த நாடக துறையானது யாழ்ப்பாணம்,கொழம்பு,மட்டக்களப்பு,மன்னார் மற்றும் மலையகம் என பிரதேச ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

  நம் நாட்டின் பல்துறை கலைஞர்களில் ஒருவர் சிறீதர் பிச்சையப்பா, இவர் 1963 ஜீலை 20ஆம் திகதி கொழம்பு கொட்டாச்சேனையில் பிறந்தார். தன் கல்வியை இவர் கொழம்பு விவேகானந்தா கல்லுரியில் பயின்றார். இவர் பிரபல நாடக நடிகர் டி.வி.பிச்சையப்பா வின் மகன் ஆவார். சிறீதர் தனது 11ஆவது வயதில் இலங்கை வானொலியின் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி முலம் நாடகத்துறை பயணத்தை ஆரம்பித்து பிற்காலத்தில் பல்கலை கலைஞராக தோற்றம் பெற்ரார். இவர் ஏராளமான வானொலி,தொலைக்காட்சி,மேடை நாடங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றி நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். நாடகம் தவிர பாடலாசிரியராக,பின்னனி பாடகராக,இயக்குனராக,மிமிக்கிரி கலைஞராகவும் மற்றும் நவீன ஓவியங்கள் வரைவதிலும் முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் தமிழ் நாடகத் துறைக்காக சிங்கள மொழி நாடகங்களை மொழிபெயர்த்து வழங்கினார். பல்கலை தென்றல் சிறீதர் பிச்சையப்பா 2010 பெப்ரவரி 21 இல் தனது 47வது வயதில் சுகவீனம் காரணமாக காலமானார்..

''நம்மர் படைப்புகளை உலகறிய செய்ய இணைவோம்''

Monday, February 7, 2011

எல்லாம் அவன் செயல்...

என் அன்பு உறவுகளிற்கு வணக்கம் , என் எண்ணங்களை , தேடல்களை உங்களோடு பகிர்வதற்காக என் வலை பதிவை அரம்பிதேன், இருபினும் என் வாழ்வின் அடுத்த படிகளை நோக்கிய பணத்திற்கா சில முயற்சியால் பதிவுகளை இட முடியவில்லை, எனினும் நீங்கள் என்னோடு பகிர்ந்த பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்தேன் ஆனால் சிலவற்றிற்குதான் கருத்துக்களை இட்டேன், சரி விடயத்திற்கு வருவோம் நீண்ட இடைவெளியின் பின் இடும் பதிவானது என் ஊரின் ஆலய உற்சவகால புகைப்பட தொகுப்பாக இடுகின்றேன் {எல்லாம் அவன் செயல்},