என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Wednesday, August 18, 2010

என் தாய்           தனி மரமாய் நின்று எமக்கு நிழல் கொடுப்பவளே,
உன் மனச்சுமையை எமக்காக மலர்ப்படுக்கை   ஆக்கியவளே,
                  உன் வழிநீரை எமக்காக உரமாக்கியவளே,
                எம் இலட்சிய பாதையாய் விரிந்தாய் நீயே,
என் பாதையின் தடையில் என் பாதணி ஆனாய் நீயே,
உன் வாழ்க்கையை எமக்காக அர்ப்பணத்தாய் நீயே,
                  உன் கவலைகளை நான் அறிவேன்,
 என் இலக்கின் பாதையில் துயர் துடைக்கும் என் தெய்வத்தை என்றுமே- -போற்றுவேன்......................

"" என் முதல் இடுக்கையை என் மனதின் பிரதிபலிப்பாய் இடுகின்றேன் "" 
               {   "என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.DINUSHAN"  }

9 comments:

ம.தி.சுதா said...

அம்மாவைப்பற்றி எழுதினால் அது தனி அழகுதான்... எனது முன் எழுத்தம் அம்மாதான் முதல் ஆக்கமும் அம்மா பற்றி தான்.... அருமையான கவிதை.. உங்கள் நட்பு வட்டத்தை அதிகரித்து திரட்டிகளில் இணைக்க வேண்டும்... என் உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு..
(தங்களின் comment setting ல் word varification ஐ no என்று கொடுக்கவும்)

ம.தி.சுதா said...

மற்றவர்கள் போல் தனிப்பட்ட பதிவுகள், மொக்கை பதிவுகள், பெரிய பதிவுகள் என எழுதினால் புது வருகையாளர் வர மாட்டார்கள். ஏதோ நண்பர்கள் மட்டும் முகஸ்துதிக்காக வந்து போவார்கள் இதில் கவனமாக இருக்கவும்.

உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...

உண்மைதான் நண்பா, தாயின் அன்பு, பாசமும் எந்த ஒரு இடத்திலும் எவர் மூலமும் பெறமுடியாத ஒன்று, உங்களின் வருகை என்னுள் நம்பிக்கையை பிறப்பித்துள்ளது..... நன்றி நண்பா...

Jana said...

முதல் இடுகையே அன்னைக்கு!! அருமை அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே..தமிழ் மூதாட்டி வழியில் வாழ்த்துகின்றேன்.
"உங்கள் பதிவுகள் உயர"

உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...

@jana உங்களின் வாழ்த்துக்கு மிக நன்றி, கண்டிப்பாக சிறந்த இடுக்கைகளை தொடர்ந்து இடுவேன்......

பிரஷா said...

முதல் இடுகையே அன்னைக்கு!அருமை வாழ்த்துக்கள்...

உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...

@பிரசா,உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக நன்றி......

mainthan said...

அம்மா என்ற பதத்திற்கு பலகோடி விளக்கங்கள் உண்டு.
தமிழின் ஆரம்பமும் "அ"
அம்மாவின் முதல் எழுத்தும் "அ"
அதேபோல் உங்க எழுத்துப் பயணத்திற்கும் உங்க அம்மாவையே துணையாக வைத்து ஆரம்பித்துள்ளீர்கள்.
உங்க வரிகள் மனதை உருக வைக்கின்றன..
பாராட்டுக்கள் தம்பி, தொடருங்கள் உங்களது எழுத்துப் பயணத்தை வெற்றியுடன்.
வாழ்க, வளர்க...

உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...

நன்றிகள்....@mainthan