என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Thursday, April 7, 2011

யாழ் கழிவுகள்..

உலக அளவில் மக்களை அச்சுறுத்தும் பல தரப்பட்ட பிரச்சினை காணப்படுகிறது. சில பிரச்சனை சூழலை மையமாக கொண்டதாகவும் வேறு சில அரசியல், பொருளாதாரத்தை மையமாகவும் கொண்டு உருவாகின்றன.
இவை அனைத்துக்கும் உடனடியாகவோ அல்லது அவசரத்தின் மத்தியிலோ தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியாது. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, இதை உரிய தரப்பிடம் கூறியும் உரிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என நம் சமூகத்தவர் மத்தியில் தாரளமான கருத்துக்கள் காணப்படுவது வழக்கம் தான். இருப்பினும் சில பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த அடித்தளமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது மக்களாகிய எம் கையில் தான் இருக்கிறது. ஆனால் இதை யாரும் ஏற்பதோ, யோசிப்பதுமோ இல்லை என்றுதான் முடிகிறது. அனைத்திற்கும் ஒரு அதிகாரம் உள்ள தரப்பையோ அல்லது குறித்த ஒரு தரப்பையோ முழமையாக  குற்றம் சுமத்துவது சரிதானா????? {என்னதான் சொன்னாலும் வரும் கஸ்டங்களையும், விளைவையும் நாம் தானே எதிர் கொள்ள போகிறோம்!!!}, 

"தொடர்ந்து கருவுடன் முழமையாக சந்திக்கிறேன் அதுவரை இப்பொழது விடை பெறுகிறேன்....."யாழ் கழிவுகளின் கருவோடு சந்திக்க மிக நீண்ட காலம் எடுத்துவிட்டேன், ஆனால் முழமையாக எழதிய பின் தான் வலைபதிவில் எழதவே ஆரம்பித்தேன். ஆனால் என்ன செய்ய காலத்தின் கட்டாயத்தால் நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.  
சரி பதிவின் கருவிற்கு வருகிறேன்பொதுவாக சமூகத்தில் இருக்கும் ஒரு சூழல் சார் பிரச்சினை வீடுகளில், தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகளின் தேக்கம். இது உலகலாவிய பிரச்சனைகளில் ஒன்றுதான். ஆனால் சில சமூகத்தில் முறையான ஒழங்குபடுத்தல், முறையாக கழிவுகளை அகற்றும் முறையால் முடிந்தவரை தீர்வுகள் காணப்படுகிறது.  யாழ் நகரை அண்டிய மக்கள் நடமாட்டம் 
அதிகமான வீதியின் நிலை

கிராமப்புறங்களை பொறுத்தவரை இவை பெரிதான குறிப்பிடத்தக்க பிரச்சினையாக அமைவதில்லை. ஏனெனில் கழிவுகள் கிராமங்களில் உரமாகவும், மீதியாகும் உணவுகள் வளர்ப்பு கால்நடைகளிற்கும் உணவாக நேரடியாக பயன்படுத்தபடுகிறது. ஆனால் நகர பகுதிகளில் கிராம பகுதிகளை போன்று இலகுவாக அகற்ற முடிவதில்லை. இதற்கு பிரதான காரணம் பல இருகின்றது , பொதுவாக பொருளாதாரத்தை மையமாக கொண்டதாக நகரப்பகுதி காணப்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது, இது கழிவுகளின் தேக்கத்தை அதிகரிக்கும் ஓர் காரணியாகிறது. 

இவ்வாறான கழிவுகளின் தேக்கங்களின் அதிகரிப்பே நகர மக்களின் அன்றாட சவால்களின் மத்தியில் தானும் ஓர் உறுப்பினராக இணைந்துள்ளது. 
நம் சமூகத்தவர்கள் குப்பைகளை {கழிவுகள்} அகற்றும் தன்மை இச்சவாலை மேலும் அதிகரிக்க செய்கிறது. நாம் முறையற்ற வகையில் குப்பைகளை தெரு ஓரங்களில் போட்டுவிட்டு அதை குறித்த பணியாளர்கள் அகற்ற தாமதிப்பதையே குற்றமாக கூறுவது ஓர் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றா?????
கழிவுகளை அகற்றும் முறையில் தாமதம் ஏற்படுவதை மட்டும் பார்பதை விடுத்து இந்த கழிவுகள் அகற்றப்படும்வரை சூழலை மாசுபடுத்தாது இருக்க என்ன நடவடிக்கை நம் சமூகத்தவர்கள் இணைந்து மேற்கொள்ள முடியும் என்று சிந்தித்திருப்போமா?????? இவ்வாறு சிந்திக்காதவிடத்து இதனால் வருகின்ற பாதிப்புகளை நாம் தானே எதிர்கொள்கிறோம்!!!! . முறையற்ற வகையில் கழிவுகளை நாம் போடும்போது அந்த கழிவுகள் குறித்த பணியாளர்களால் அகற்றும்வரை அதை பல ஆராட்சியாளர்கள் சோதனை செய்து விட்டு கழிவுகளை மேலும் சிதறடிக்கின்றனர், {என்ன ஆராட்சியாளர்கள் யாராக இருக்கும் என்று யோசிகின்றீர்களா?? வேற யார சொல்ல போறன் நம் சமூகத்தில் தாராளமாக திரிகின்ற கட்டாகாலி கால்நடைகள் தான்} '"இவ்வாறான கட்டாகாலி கால் நடைக்கும் ஏதாவது  சட்டங்களை நிறைவேற்றத்தான் வேண்டும்
சரி நான் கழிவுப்பிரச்சினைக்கு வாறன், பொதுவாக நம் நாட்டில் கழிவுகளை அகற்றுபவர்கள் மனிதர்கள்தான், இவர்களிற்கும் நம்மை போன்ற உணர்வுகள்தானே இருகின்றது???? ஏன் இதை நாம் சிலர் சி்ந்திப்பதில்லை??? , பொதுவாக முறையற்ற வகையில் கழிவுகள் எறியப்பட்ட இடத்திற்கு அருகாக செல்லும் போது எவ்வளவு இடர்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றோம். இவ்வாறான கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் எவ்வளவு கஸ்டத்தை எதிர் கொள்வர்???{ "தன் குடும்பத்தின் வயிற்றை நிரப்பவே இத்தனை கஸ்டங்களை சகித்து நம் சமூக கழிவுகளை அகற்றுகின்றனர்"
நாம் அலட்சியத்தோடு கழிவுகளை முறையற்று போடுவதால் குறித்த நம் சமூகம் உட்பட எத்தனையோ தரப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்டுகிறது. இந்த பிரச்சனையை ஒவ்வோர் சமூகமூம் ஒருமித்த முடிவுடன் முயற்சி செய்தால் நம் சமூகத்தை பாதுகாக்கும் முக்கிய பங்கை நம்மால் வெற்றிகரமாக செயற்படுத்தமுடியும்............... 


"இந்த பிரச்சினைக்கு நம் சமூகத்தவர்களால் என்ன நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை கருத்து பதிவுடன் கூறுங்கள்......."9 comments:

♔ம.தி.சுதா♔ said...

/////அனைத்திற்கும் ஒரு அதிகாரம் உள்ள தரப்பையோ அல்லது குறித்த ஒரு தரப்பையோ முழமையாக குற்றம் சுமத்துவது சரிதானா????////

சிந்திக்க வேண்டிய இடம் சகோதரம்... காத்திருக்கிறேன்...

மைந்தன் said...

தம்பி அப்புறமாக வாறன் நிறைய பேசுவம்.
இணைப்பிற்கு நன்றி!

அன்பு நண்பன் said...

nanre @sutha & மைந்தன் , mekuthi anum sila thenankalil eda ulan,,,

கிருஷ்ணா said...

நான் ஏன் செய்யவேண்டும்? ... எனக்கென்ன தலைஎழுத்து? , யாரவது பார்த்துகொள்ளட்டும் என்றே பழகிவிட்டோமே ? மீறி நடக்க முற்பட்டால் பிழைக்க தெரியாதவன்கிறாங்களே?

கிருஷ்ணா said...

நான் ஏன் செய்யவேண்டும்? ... எனக்கென்ன தலைஎழுத்து? , யாரவது பார்த்துகொள்ளட்டும் என்றே பழகிவிட்டோமே ? மீறி நடக்க முற்பட்டால் பிழைக்க தெரியாதவன்கிறாங்களே?

அன்பு நண்பன் said...

@கிருஷ்ணா,,, சில பிரச்சினைகள் நம் வீட்டு அடுப்பு நெருப்பு நம் கூரையை எரிப்பதை போன்ற விளைவை ஏற்படுத்துகிறது,, அவற்றை நாம் கவனிக்காம விடமுடியாது தானே???

“நிலவின்” ஜனகன் said...

நடுநிலைத் தன்மையுடன் எழுதியுள்ளீர்கள்.. சிந்திக்க வேண்டிய விடயமும் கூட..

அன்பு நண்பன் said...

@“நிலவின்” ஜனகன் "நடுநிலைத் தன்மையுடன் எழுதியுள்ளீர்கள்.. சிந்திக்க வேண்டிய விடயமும் கூட" nanre bro...

Admin said...

www.yarlinvidiyal.blogspot.com